முஸ்லிம் மாணவர்கள் சூரிய நமஸ்காரத்தில் பங்கேற்கக் கூடாது : சூரிய வழிபாடு இஸ்லாத்தில் கிடையாது – இஸ்லாமிய அமைப்பு

இந்தியா

முஸ்லிம் மாணவர்கள் சூரிய நமஸ்காரத்தில் பங்கேற்கக் கூடாது : சூரிய வழிபாடு இஸ்லாத்தில் கிடையாது – இஸ்லாமிய அமைப்பு

முஸ்லிம் மாணவர்கள் சூரிய நமஸ்காரத்தில் பங்கேற்கக் கூடாது : சூரிய வழிபாடு இஸ்லாத்தில் கிடையாது – இஸ்லாமிய அமைப்பு

முஸ்லிம் மாணவர்கள் சூரிய நமஸ்காரத்தில் பங்கேற்கக் கூடாது என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியுள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு Amrit Mahotsav கொண்டாட்டங்களில் ஒரு அங்கமாக நாடு முழுவதிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் தேசிய கொடி முன்பாக சூரிய நமஸ்காரம் மேற்கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு கடந்த டிசம்பர் 29ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் மூலம் ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 30,000 கல்வி நிறுவனங்களில், 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சூரிய நமஸ்காரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதே நேரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த சூரிய நமஸ்கார உத்தரவு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த ஆணையத்தின் பொதுச் செயலாளர் மவுலானா கலீத் ரஹ்மானி கூறியிருப்பதாவது, “சூரிய வழிபாடு இஸ்லாத்தில் கிடையாது. எனவே, இது போன்ற நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது. பெரும்பான்மையினரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மற்றவர்கள் மீது திணிக்க அரசு முயற்சிக்கிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. அரசாங்கம் உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் மற்றும் நாட்டில் மதச்சார்பற்ற மதிப்புகளை வளர்க்க வேண்டும், இத்தகைய உத்தரவுகளை வெளியிடுவதற்கு பதிலாக, பணவீக்கம் வேலையின்மை போன்ற உண்மையான பிரச்சினைகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த உத்தரவை அரசு திரும்பப் பெற வேண்டும் ” என்று அவர் கூறினார்.

பாஜக கண்டனம்: அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இந்த விஷயத்தை அரசியலாக்க முனைவதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், உடல் நலத்துடன் தொடர்புடைய யோகாவுக்கு உலக அளவில் அங்கீகாரம் அளித்து இந்தியாவின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி உயர்த்தியுள்ளார். மத்திய கிழக்கில் உள்ள அனைத்து முஸ்லீம் நாடுகள் உட்பட முழு உலகமும் யோகாவையும் அதன் அங்கமான சூரிய நமஸ்காரத்தையும் அங்கீகரித்துள்ளது.ஆனால் எதிர்வரும் தேர்தல் காரணமாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் காங்கிரஸ் கட்சியின் ஒலி பெருக்கியாக மாறியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

Leave your comments here...