தொடரும் பட்டாசு ஆலை விபத்து : உயிர் பலியை தடுக்க செயல் திட்டம் வேண்டும் – தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை..!

அரசியல்தமிழகம்

தொடரும் பட்டாசு ஆலை விபத்து : உயிர் பலியை தடுக்க செயல் திட்டம் வேண்டும் – தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை..!

தொடரும் பட்டாசு ஆலை விபத்து :  உயிர் பலியை தடுக்க செயல் திட்டம் வேண்டும் – தமிழக அரசுக்கு  அண்ணாமலை கோரிக்கை..!

‘பட்டாசு ஆலை விபத்தால் தொடரும் உயிர் பலியை தடுக்க ஒரு செயல் திட்டம் வகுக்க வேண்டும்’’ என்று தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டியில் பட்டாசு ஆலையில் இருந்த பட்டாசுகள் வெடித்து நடந்த வெடி விபத்தில், 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்து உயிருக்குப் போராடி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விதிமுறை மீறலில் ஈடுபட்டு விபத்து ஏற்படுத்தியதாக பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த சூழலில் தமிழக முதல்வர், பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்கியும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த நிலை தொடர்கதையாக மீண்டும், மீண்டும் நிகழக்காரணம் என்ன என்பதை அரசு கண்டறிய வேண்டும்.

ஆகவே மாநில அரசு தீவிரமாக ஆராய்ந்து பட்டாசு ஆலை நிர்வாகத்துக்கும் அதன் தொழிலாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், மற்றும் பட்டாசு ஆலை விபத்துக்களுக்கும் தொடரும் உயிர்ப்பலியை தடுக்கும் வகையிலும், அரசு ஒரு செயல் திட்டம் வகுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...