ஆங்கில புத்தாண்டு : நள்ளிரவில் கோவில்கள் திறப்பதா..? இந்து விரோத அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் – இந்து முன்னணி கண்டனம் ..!
ஆங்கில புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்கள் திறக்கும், தமிழக அரசின் முடிவுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் 12 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் அதற்கு தடையில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்துள்ளது ஹிந்து விரோதமானது . அறநிலை துறை அமைச்சர் ஆகம விதிகளை பற்றித் தெரியாமல் இருப்பது வேடிக்கையானது, கேலிக்குரியது.
இந்து ஆலயங்களுக்கு தனித்தனியாக சம்பிரதாயம் உள்ளது, வழிபாட்டு முறை உள்ளது . காலை முதல் மாலை வரை ஒவ்வொரு காலத்திற்கும் கால பூஜை இருக்கும். சில குறிப்பிட்ட காலங்களில் அதாவது சிவராத்திரி, வைகுண்ட ஏகாதிசி போன்ற நாட்களில் மட்டுமே இரவு நேரம் கோவில்கள் திறந்திருப்பது வழக்கம். ஆனால் அந்நிய ஆங்கில புத்தாண்டு ஜனவரி1 முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு கோயிலில் திறப்பது என்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில்
சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் 11 மணிக்கு மேல் எந்தவித ஹோட்டல்கள் இயங்கக்கூடாது, மதுபானக் கூடம் செயல்படக்கூடாது, 11 மணிக்கு மேல் வாகனத்தில் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். ஆனால் கோயில்களுக்குச் செல்லலாம் என்று அறநிலையத்துறை அமைச்சர் சொல்கின்றார்.
இப்படி குழப்பம்தான் திமுக அரசின் நிர்வாகத்தில் நிலவுகிறது. தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சிதைக்கும் இந்த ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அரசுக்கு இந்து முன்னணி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இந்த நிலையில் கோவில்களை திறப்பது இந்துக்கள் மனதில் வேதனையை ஏற்படுத்துகிறது.
இந்த அறிவிப்பை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். ஆங்கில புத்தாண்டு என்ற பெயரில் கலாச்சார சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும் நமது பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கின்றது. நன்றி வணக்கம் இவ்வாறு கூறியுள்ளார்.
Leave your comments here...