விமானப் பயணியிடம் இருந்து 1 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல்…!

கொகைன் அடங்கிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட துகள்களை விழுங்கி கடத்தலில் ஈடுபட்ட பெண் பயணியை புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒரு கிலோ போதைப்பொருள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முனையம் 3-க்கு சில தினங்களுக்கு முன் வந்த உகாண்டா பயணியின் நடை மற்றும் உடல் அசைவுகள் வழக்கத்திற்கு மாறாக இருந்ததால், அவருக்கு உதவி ஏதேனும் வேண்டுமா என்று சுங்க அதிகாரி ஒருவர் நல்லெண்ண அடிப்படையில் முதலில் அணுகினார்.
உதவியை அவர் மறுத்ததோடு, விசித்திரமான உடல் அசைவுகளை தொடர்ந்து வெளிப்படுத்தியதால், அதிகாரிகள் அவரை இடைமறித்து விசாரித்தனர். போதைப்பொருள் அடங்கிய 91 துகள்களை விழுங்கியதை விசாரணையின் போது அவர் ஒப்புக்கொண்டார்.

Customs officials detect around 1 kg of cocaine
அவருக்கு அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டதால், ஆர் எம் எல் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பாட்டார். மருத்துவமனையில் அவரது உடலில் இருந்து 992 கிராம் போதைப்பொருள் வெளியே எடுக்கப்பட்டது. 2021 டிசம்பர் 29 அன்று அவர் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
Leave your comments here...