ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை – நாளை மதியம் மண்டல பூஜை..!

ஆன்மிகம்

ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து தீபாராதனை – நாளை மதியம் மண்டல பூஜை..!

ஐயப்பனுக்கு  தங்க அங்கி  அணிவித்து தீபாராதனை – நாளை மதியம் மண்டல பூஜை..!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் இந்தாண்டுக்கான மண்டல காலம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. மண்டல பூஜைக்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா காணிக்கையாக வழங்கிய தங்க அங்கி, இன்று காலை ராணி பெருநாடு சாஸ்தா கோவிலிலிருந்து புறப்பட்டு மதியம் பம்பை வந்தடையும்.

பம்பையில் பக்தர்கள் தரிசனத்துக்கு பின் மாலையில் தலை சுமடு மூலம் சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படும்.அய்யப்ப சேவா சங்க கேரள மாநில துணைத் தலைவர் ஹரி தாசன் நாயர் தலைமையில் எட்டு பேர் அடங்கிய குழுவினர் அங்கியை சுமந்து வருகின்றனர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த நாமக்கல் மோகனசுந்தரம், விழுப்புரம் செந்தில்குமார் , ஊட்டி சந்திரசேகர்-, மதுரை செல்வராஜ்- ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வரும் அங்கிக்கு தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்பு கொடுத்து அழைத்து வருவர்.

கோவில் முன் வந்ததும் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி அங்கியை பெற்று நடை அடைத்த பின் அய்யப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு நடை திறந்து தீபாராதனை நடக்கும்.நாளை காலை 11:50 முதல், மதியம் 1:15 மணிக்குள் தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடைபெறும். மதியம் நடை அடைத்த பின், மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அத்தாழ பூஜைக்குப் பின் இரவு 9:50 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுவதுடன் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவுபெறும்.

Leave your comments here...