நிர்பயா நிதி : தமிழ்நாட்டிற்கு ரூ 296.62 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்
நிர்பயா நிதி மூலம் தமிழ்நாட்டிற்கு ரூ 317.75 கோடி வழங்கப்பட்டு, ரூ 296.62 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு ரூ 15.11 கோடி வழங்கப்பட்டு, ரூ 9.5 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி. ஸ்மிரிதி சுபின் இராணி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
நிர்பயா நிதியின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி வழங்கப்பட்டு பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.நிர்பயா நிதியின் கீழ் 2018-19-ம் ஆண்டு ரூ. 550 கோடியும், 2019-20-ம் ஆண்டு ரூ. 555 கோடியும், 2020-21-ம் ஆண்டு ரூ. 1355.23 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, அகமதாபாத், பெங்களூரு, தில்லி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை உள்ளிட்ட 8 நகரங்களில் ‘ஸேஃப் சிட்டி ப்ரபோஸல்’ எனும் பாதுகாப்பான நகரங்களுக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டிஎன்ஏ ஆய்வு, சைபர் தடயவியல் மற்றும் இவை தொடர்பான வசதிகள் நிறுவப்பட்டு வருகின்றன. நிர்பயா நிதியின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ 317.75 கோடி வழங்கப்பட்டு, ரூ 296.62 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு ரூ 15.11 கோடி வழங்கப்பட்டு, ரூ 9.5 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.
Leave your comments here...