இனி எங்க நாட்டிற்கு வரவேண்டாம்…! நாம் தமிழர் நிர்வாகிக்கு வாழ்நாள் தடை விதித்த சிங்கப்பூர்..!

தமிழகம்

இனி எங்க நாட்டிற்கு வரவேண்டாம்…! நாம் தமிழர் நிர்வாகிக்கு வாழ்நாள் தடை விதித்த சிங்கப்பூர்..!

இனி எங்க நாட்டிற்கு வரவேண்டாம்…! நாம் தமிழர் நிர்வாகிக்கு வாழ்நாள் தடை விதித்த சிங்கப்பூர்..!

சிங்கப்பூரில் மாவீரர் நாள் கொண்டாடியதுடன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அட்டைப்படம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை வைத்திருந்த நபர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எடையூர் சிவராமன் நகரை சேர்ந்தவர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் எடையூர் கடைவீதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் குமரேசன் (வயது 25).

இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் இணையதளம் மூலம் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து உள்ளார். இந்த நிலையில் குமரேசன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மாவீரர் நாளும் அவர் கொண்டியிருக்கின்றார்.

இக்காரணங்களுக்காக அவர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். சிங்கப்பூரில், தமிழர்கள் சிலர் மாவீரர் நாள் விழாக் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். இது தொடர்பாக சிங்கப்பூர் காவல்துறை விசாரித்து வந்தது.

அப்போது, விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அட்டைப்படம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை வைத்திருந்த, திருவாரூரைச் சேர்ந்த குமரேசனை அந்நாட்டு காவல்துறை விசாரித்துள்ளது. விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்பதால் ஆறு நாட்களுக்கும் மேலாக விசாரணை நடத்தி, அவரை சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இனி வாழ்நாள் முழுவதும் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாத வகையில், அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...