தேர்தல் சீர்திருத்த மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்

இந்தியா

தேர்தல் சீர்திருத்த மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்

தேர்தல் சீர்திருத்த மசோதா : மக்களவையில் நிறைவேற்றம்

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார்’ எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா – 2021 லோக்சபாவில் நேற்று குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டது. ”இந்த மசோதா மூலம் தேர்தல் நடைமுறைகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த முடியும்” என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். தேர்தல் மீதான மக்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க தேர்தல் சட்டங்களில் நான்கு வகையான சீர்திருத்தங்களைக் கொண்டு வர தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.’வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்;

புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தற்போது வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இது ஆண்டுக்கு நான்கு முறையாக அதிகரிக்க வேண்டும்.’பாதுகாப்பு படையில் பணியாற்றும் வீரர்கள் சொந்த ஊருக்கு வந்து ஓட்டளிக்க முடியாத பட்சத்தில் அவர்களுக்கு பதிலாக அவர்களது மனைவி ஓட்டளிக்க சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் பணியில் இருக்கும் பெண் அதிகாரியின் கணவர் ஓட்டளிக்க சட்டத்தில் இடமில்லை. இனி கணவர்களுக்கும் அந்த உரிமையை அளிக்க வேண்டும்.

‘ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு எந்த இடத்தையும் பயன்படுத்திக் கொள்ள கூடிய அதிகாரத்தை தேர்தல் கமிஷனுக்கு வழங்க வேண்டும்’ ஆகிய நான்கு சீர்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசிடம் தேர்தல் கமிஷன் பரிந்துரைத்தது.இதையேற்று ‘தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா – ௨௦௨௧’ஐ மத்திய சட்ட அமைச்சகம் தயாரித்தது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதை பார்லிமென்டில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது.எனினும் பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் குளிர்கால கூட்டத்தொடரின் பல நாட்கள் வீணாகின. இந்நிலையில் நேற்று காலை லோக்சபா கூடியவுடன் எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் அமளியில் ஈடுபட்டன.

இதற்கிடையே தேர்தல் சீர்திருத்த மசோதாவை சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். அதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளிக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது.

Leave your comments here...