சென்னை மாநகராட்சி அதிரடி : தெருக்களில் சுற்றி திரிந்த 16 மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்..!
கோயம்பேடு மார்க்கெட் பகுதிக்குட்பட்ட அங்காடிகளுக்கு வந்து செல்லும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக அதிகளவிலான மாடுகள் சுற்றிதிரிவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.
அதன்பேரில் மாநகராட்சி சுகாதார துறையின் சார்பில் நேற்று கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மாடுகளை பிடிக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் 16 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாடுகள் மாநகராட்சியின் புதுப்பேட்டையில் உள்ள தொழுவத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாக பராமரித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Leave your comments here...