இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு – எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழகம்

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு – எங்கெல்லாம் மழை பெய்யும்?

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு – எங்கெல்லாம் மழை பெய்யும்?

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று(டிச.,17) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால், வரும் 20ம் தேதி வரை, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவக்காற்றால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில், இன்று பகல் வரை மிதமான மழை பெய்யும். நாளை காலை வரை நிலவரப்படி, தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்; மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

அதேபோல், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 30 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த 24 மணி நேரத்தில், நாகையில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது. திருக்குவளை, 3; திருப்பூண்டி, கோடியக்கரை, 2 மற்றும் திருத்துறைப்பூண்டியில் தலா, 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய பூமத்திய ரேகை பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இதனால், இன்று முதல் 20ம் தேதி வரை பூமத்திய ரேகை பகுதியில் உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும். மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave your comments here...