ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் கொவிட்-19, டெங்கு சேர்ப்பு..!

இந்தியா

ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் கொவிட்-19, டெங்கு சேர்ப்பு..!

ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் கொவிட்-19, டெங்கு சேர்ப்பு..!

ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் கொவிட்-19, டெங்கு சேர்ப்பு- தமிழகத்தில் 18,50,134 பரிசோதனைகள் செய்யப்பட்டு, 31,076 சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக நேற்று பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

கொவிட்-19 மற்றும் டெங்கு போன்ற நோய்களுக்கான சிகிச்சை ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 20,51,692 கொவிட்-19 பரிசோதனைகள் மற்றும் 8,29,826 சிகிச்சைகளுக்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை, 18,50,134 கொவிட்-19 பரிசோதனைகள் மற்றும் 31,076 சிகிச்சைகளுக்கான ஒப்புதல்கள்ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ளன.

Leave your comments here...