முன்கள பணியாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி – இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் யோசனை
முன்களம் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனாபூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜெயலால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ சங்கத்தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- இந்தியா முழுவதும் கடந்த வாரத்தில் ஒமைக்ரான புதிய பரிணாமத்தின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த வைரஸ் பரவும் விதம் டெல்டாவை விட அதிகமாக இருப்பதால் அரசும், பொதுமக்களும் மிக விழிப்புணர்வோடு இதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
டாக்டர்கள், முன்கள பணியாளர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிற புற்றுநோயாளிகள் ஆகியோருக்கு 3-வது டோஸ் தடுப்பூசி வழங்க வேண்டும். தற்போதுள்ள சூழலில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், அலுவலர்களும் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...