இந்தியா- ரஷ்யா உச்சி மாநாடு : ராணுவம், விண்வெளி, எரிசக்தி துறையில் முக்கிய ஒப்பந்தம்… மோடி – புடின் பேச்சுவார்த்தை..!
இந்தியா – ரஷியா இடையேயான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் மோடி பங்கேற்றுள்ளனர்.
இந்தியா, ரஷ்யா இடையே ஆண்டுதோறும் நடைபெறும் 21வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒருநாள் பயணமாக இந்தியா வந்தார்.
டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி – புடின் சந்திப்பு நேற்று மாலை நடந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான முக்கிய ராணுவ ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வேண்டுமென மோடி வலியுறுத்தியதை புடின் ஏற்றுக் கொண்டார். தடுப்பூசி தயாரிப்பது, ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். மேலும், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிறகான சூழல், சர்வதேச தீவிரவாதம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.கொரோனா பரவலுக்கு பிறகு புடின் மேற்கொள்ளும் 2வது வெளிநாட்டுப் பயணம் இது. இதற்கு முன் கடந்த ஜூன் மாதம் அவர் ஜெனிவாவில் ரஷ்யா அதிபர் புடினை சந்தித்து பேசினார்.
இரு நாடுகளின் 21-வது உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
I warmly thank H.E. President Putin for his visit to India. We exchanged very useful ideas for expanding our strategic, trade & investment, energy, connectivity, defence, science & technology and cultural cooperation. We also shared views on important global and regional issues. pic.twitter.com/FQGFgQzsfX
— Narendra Modi (@narendramodi) December 6, 2021
இந்த மாநாட்டின் போது பேசிய ரஷிய அதிபர் புதின், இந்தியாவை நாங்கள் ஒரு பெரிய சக்தியாக கருதுகிறோம். இந்தியா நட்பு நாடு மற்றும் காலத்தால் பரிசோதிக்கப்பட்ட ரஷியாவின் நண்பன் இந்தியா. நமது இரு நாடுகளின் உறவு வளர்ச்சியடைந்து வருகிறது. இது மேலும் வளர்ச்சியடைய நான் விரும்புகிறேன்.
தற்போது, ரஷியாவில் இருந்து கூடுதல் முதலீடு வர உள்ள நிலையில் இருநாடுகளுக்கும் இடையேயான முதலீடு 38 பில்லியனை தொட்டுள்ளது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ராணுவம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாங்கள் பெரிதும் ஒத்துழைக்கிறோம்.
நாம் இணைந்து அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி அதை இந்தியாவில் தயாரிக்கிறோம். பயங்கரவாதம் தொடர்புடைய அனைத்தையும் பற்றி இயற்கையாகவே நாங்கள் கவலைப்படுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்பது போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சண்டையுமாகும். ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து நாங்கள் கவலைகொள்கிறோம்’ என்றார்.
இது குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘உங்கள் பயணத்தின் மூலம் இந்தியா மீது கொண்டுள்ள அன்பு தெளிவாகத் தெரிகிறது. இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. கொரோனா சவால்கள் இருந்தபோதிலும், இருதரப்பு உறவின் வளர்ச்சி வேகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக உலகம் பல அடிப்படை மாற்றங்களை கண்டு வருகிறது. அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் இந்தியா, ரஷ்யா இடையேயான நட்பு நிலையானதாக உள்ளது. அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்தியா, ரஷ்யா இடையேயான உறவு உண்மையானது, தனித்துவமானது, இருதரப்பு நலன்களை நோக்கமாக கொண்டது’’ என்றார்.
முன்னதாக, இந்தியா, ரஷ்யா இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை கூட்டாக சந்தித்து பேசினார். 6 லட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்வது, உள்ளிட்ட விண்வெளி, எரிசக்தி துறை, ராணுவம் ஆகியவற்றில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரவு விருந்துடன் புடின் நேற்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
Leave your comments here...