போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயற்சி : ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கைது..!
போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அடுத்த ஊஞ்சம்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன், சங்கராபுரத்திலுள்ள இவரது நிலத்தை வாங்குவதற்காக கடந்த 2020ம் ஆண்டு பெரியகுலத்தை சார்ந்த சந்தனபாண்டியன் ரூ.1 லட்சம் முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டுள்ளார்.
பின்னர் ஒப்பந்தம் படி உரிய காலத்தில் நிலத்தை பத்திரப்பதிவு செய்து வாங்காததால் சந்தனபாண்டியன் கொடுத்த முன்பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்போது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியராக பணியாற்றிய மணவாளன் மற்றும் சந்தனபாண்டியன் ஆகியோர் சந்திரசேகரனின் நிலத்தை அபகரிக்க போலி ஆவணம் தயாரித்ததாக தெரிகிறது.
நிலம் விட்டதாகவும் அதற்காக சந்திரசேகரன் ஒன்றரை கோடி ரூபாய் வாங்கியதாகவும் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம் போலி என்றும் தனது நிலத்தை மணவாளன் மற்றும் சந்தனபாண்டியன் ஆகியோர் அபகரிக்க முயல்வதாக கடந்த ஆண்டு தேனி மாவட்ட குற்ற தடுப்பு பிரிவில் சந்திரசேகரன் புகார் அளித்தார்.
இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியராக வரும் மணவாளனை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். நிலமோசடி புகாரில் மண்டல துணை வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆண்டிபட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave your comments here...