ஜாவத்’ புயல் காரணமாக 7 ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே நிர்வாகம்
- December 4, 2021
- jananesan
- : 810
- jawad
‘ஜாவத்’ சூறாவளி காரணமாக ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்களைக் கிழக்கு கடற்கரை ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதுடன், பயணப் பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
ரயில் சேவைகள் ரத்து விவரங்கள்: இன்று (டிச.4) எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் மெயில்.* தன்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ்.
* தாம்பரம் – ஜசிதி வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்.
* ஹவுரா – எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் சூப்பர்ஃபாஸ்ட் மெயில்.
* விழுப்புரம் ஜே.என் – புருலியா இரு வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்.* நாளை (டிச.5) எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் – ஹவுரா கோரமண்டல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்.
* பூரி – எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ். குறிப்பிட்ட ரயில் சேவைகள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது.
இதே போன்று ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ், இன்று ஆலப்புழாவில் இருந்து மாலை 6.00 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டு, கூடூர், பல்ஹர்ஷா மற்றும் ஜார்சுகுடா என மாற்று வழியில் இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...