பிரதமரின் கரீஃப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் : பலன் அடைந்த 14.72 கோடி பயனாளிகள்..!
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 14.72 கோடி பயனாளிகள் பிரதமரின் கரீஃப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பலனைப் பெற்றுள்ளனர்
நாட்டில் கொவிட்-19 பெருந்தொற்று கடந்த ஆண்டு ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகள் காரணமாக 2020 மார்ச்சில், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டப் பயனாளிகளுக்கு, பிரதமரின் கரீஃப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ வீதம் விலையில்லா உணவு தானியங்கள் (அரிசி / கோதுமை) சுமார் 80 கோடி பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குடும்ப அட்டையின் மூலம் வழக்கமாக வழங்கப்படும் உணவு தானியத்திற்கு கூடுதலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு மட்டும் ஐந்து கட்டங்களில், ஏறத்தாழ 139.14 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு மொத்த மானியமாக ரூ.43,335 கோடி செலவிடப்படுகிறது. ஐந்தாம் கட்டத்தில் மட்டும் (டிசம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை) உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.8,877 கோடி மானியத்துடன் 29.43 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் உத்தரப்பிரதேசத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Leave your comments here...