சேலத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து 3 வீடுகள் தரைமட்டம்: உயிரிழந்த 5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு..!
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் தெருவில் உள்ள பத்மநாபன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பத்மநாபன் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத் துறை சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தார். இவரது வீட்டில் நேற்று காலை சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் அவரது வீடு மற்றும் சுற்றியுள்ள 5 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இதில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கினர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படையினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 இலட்சம், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்க மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார். pic.twitter.com/vnPf4uW14P
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 23, 2021
இந்நிலையில், சிலிண்டர் வெடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு. படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Leave your comments here...