ஷார்ட்ஸ் அணிந்து சென்றதால் வங்கியில் நுழைய வாடிக்கையாளருக்கு அனுமதி மறுப்பு – எஸ்பிஐ வங்கி கூறிய விளக்கம்..!
கொல்கத்தாவில் எஸ்பிஐ வங்கிக்குள் நுழைய ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. ஆஷிஷ் என்பவர் ஷார்ட்ஸ் அணிந்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்குள் சென்றுள்ளார். அவர் அணிந்த உடைகாரணமாக அவருக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஷார்ட்ஸ் அணிந்துவந்தவரை வீட்டிற்கு சென்று முழு பேண்ட் அணிந்து வருமாறு வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆஷிஸ், ”நாகரீகத்தை கடைபிடியுங்கள் என்று கூறி, ஷார்ட்ஸ் அணிந்து உங்கள் வங்கி கிளைக்கு வந்த எண்ணை அங்கிருந்தவர்கள் திருப்பி அனுப்பிவிட்டனர்” என்று கூறி எஸ்பிஐ வங்கிக்கு டேக் செய்திருக்கிறார்.”ஒரு வாடிக்கையாளர் என்ன அணியலாம் மற்றும் அணியக்கூடாது என்று உங்கள் பாலிசியில் ஏதாவது இருக்கிறதா? அதிகாரப்பூர்வ கொள்கை உள்ளதா?” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு புனேவில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்ததாகவும், அதில் ஒரு நபர் பெர்முடா ஷார்ட்ஸ் அணிந்திருந்ததால் நுழைய மறுக்கப்பட்டதாகவும் ஆஷிஷ் தெரிவித்தார். அவரது ட்விட்டர் பதிவுக்கு பலரும் ஷேர் செய்து தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து எஸ்பிஐ வங்கி விளக்கம் அளித்து உள்ளது. அதில், உங்களுடைய பிரச்னையை புரிந்துகொண்டோம். அதனை மதிக்கிறோம். இதனை ஒரு வாய்பாக கருதி உங்களுக்கு விளக்கம் தர விரும்புகிறோம், அப்படி கூறுவது போல வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேக ஆடைக்கட்டுப்பாடு எதுவும் எஸ்.பி.ஐக்கு இல்லை. பொது இடத்துக்கு எப்படி செல்வோமோ அப்படி செல்ல வேண்டும் மேலும் உள்ளூர் அளவிலான ஏற்றுக்கொள்ளும்ப்படியான ஆடைகளை அணிந்து வரலாம் எனவும், சம்பந்தப்பட்ட வங்கி கிளையின் கிளை எண் மற்றும் பெயரை தெரிவியுங்கள். என்ன என பார்த்து சொல்லுகிறோம் என தெரிவித்திருந்தனர்.
Hello @TheOfficialSBI
I have with me Mr Joy Chakraborty ( CM Admin of the region ) with me, they came to my home and have taken care of the Issue.
I would like to close this complaint and do not want any action against the staff. https://t.co/Dtw7gH9VwB
— Ashish (@ajzone008) November 20, 2021
இதனிடையே எஸ்பிஐ வங்கி கிளை மீது புகார் தெரிவித்த ஆஷிஷ் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், என்னுடைய வீட்டுக்கு எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை மேலாளர் ஜாய் சக்கரபோர்த்தி வந்திருக்கிறார். அவர் என் வீட்டுக்கே வந்து எனது பிரச்னையை சரி செய்துதருவதாக உறுதியளித்திருக்கிறார். எனவே வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எதுவும் தேவையில்லை. இந்த புகாரை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
Leave your comments here...