பழங்குடியினரை வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கு மதமாற்றம் – 9 பேர் மீது மீது பாய்ந்தது வழக்கு..!
குஜராத் மாநிலம் பரூச்சில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வசவா சமூக பழங்குடியினரை, வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி இஸ்லாமிய மதத்துக்கு மாற்றியதாக ஒன்பது பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பரூச் மாவட்டத்தின் அமோத் தாலுகாவில் உள்ள ககாரியா கிராமத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக லண்டனில் வசிக்கும் உள்ளூர் நபர் உட்பட 9 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், பழங்குடி சமூகத்தின் மக்களிடையே உள்ள பலவீனமான பொருளாதார நிலை மற்றும் கல்வியறிவின்மை ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களை மதமாற்றம் செய்ய தூண்டினார்கள்” என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
குஜராத் மத சுதந்திர திருத்த சட்டம், 2021 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
“வெளிநாட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி முஸ்லிம் அடிப்படைவாதிகள் சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யும் நடவடிக்கையை கிராமத்தில் நீண்ட காலமாக செய்து வந்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வசவா இந்து சமூகத்தினரை ஏமாற்றி பணம் மற்றும் பிற உதவிகளை வழங்கி அவர்களை ஏமாற்றி, இரு சமூகத்தினரிடையே பகையை பரப்பி, அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர்” என்று பரூச் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...