வேலூர் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பைரவர் ஜெயந்தி விழா : அழைக்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்..!
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளடன் பைரவர் ஜெயந்தி பைரவாஷ்டமி முன்னிட்டு 17.11.2019 ஞாயிற்றுக்கிழமை முதல் 19.11.2019 செவ்வாய்க்கிழமை வரை ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவர், ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் 64பைரவர்களுக்கு 64தீபங்கள் ஏற்றி, 64 யாக்குண்டங்களில் 64சிவாச்சரியர்களால்64 பைரவர் யாகம் நடைபெற்று 64 திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.
தேய்பிறை அஷ்டமியும் காலபைரவர் வழிபாடும்:
ஆணவத்தை அழிக்க சிவபெருமான், ஸ்ரீ கால பைரவராக அவதரித்த நாளே கால பைரவாஷ்டமி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். அந்த நாளில் திருமகளின் எட்டு வடிவங்களும் பைரவரை வணங்குவதாக ஐதீகம். அதிலும் அவர் அவதரித்த கால பைரவாஷ்டமி நாளில் அவரை வணங்குவது, சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும். மற்றும் இந்நாளில் சொர்ண கமல ரேகை அமைந்திருக்கும் சொர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியை வணங்குவது இன்னும் சிறப்பானது.
64 பைரவர் வழிபாடும் ஹோமத்தின் பயன்களும்:-
அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். எழரைச் சனி, அஷ்டமச் சனியாவும் நன்மையாக முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
மேலும் தீராத வியாதிகள் தீரவும், நம்மை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியவும். கெட்ட அதிர்வுகள் விலகவும், மன அமைதியே இல்லாதவர்களுக்கு மன அமைதி கிடைக்கும், பைரவர் துணையுடன் செல்வவளம் பெருகவும், துன்பம் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகவும், அபத்துகளில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் விடுபடவும், சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டவும், சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும், பன்னிரண்டு ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்சபூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வமான பைரவர் அருள் கிடைத்திட பைரவாஷ்டமி தினத்தில் மேற்கண்ட 64 பைரவர் யாகத்துடன் அஷ்ட பைரவர் சகித மஹா கால பைரவருக்கு நடைபெறும்.
இவ்வைபவத்தில் தாங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அவர்களுக்கு வேண்டிய வரங்களை பெற்று வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று திருவருளை பெறுமாறு 64 பைரவர் சகித 64 யோகினிகளை ப்ராத்திக்கின்றோம். மேற்கண்ட மஹா யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Leave your comments here...