இந்தியா
இந்திய கடற்படையில் புதிதாக நீர்மூழ்கிக்கப்பல் ‘வேலா’ அடுத்த வாரம் சேர்ப்பு..!
இந்திய பெருங்கடல் பகுதியில், சீனாவின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இந்த தருணத்தில் வேகமாக மாறி வருகிற பாதுகாப்புச்சூழலை கையாள்வதற்கு, போர்த்திறனை வலுப்படுத்தும் வகையில் இந்திய கடற்படையில் அடுத்த வாரம் புதிய ஏவுகணை அழிப்பு நாசகார கப்பலும், கல்வாரி வகை நீர் மூழ்கி கப்பலும் சேர்க்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக கடற்படையின் துணைத்தளபதி சதீஷ் நம்தியோ கோர்மடே நேற்று கூறுகையில், “கடற்படையில் ஏவுகணைகளை அழிக்க வல்ல நாசகார கப்பல் ‘விசாகப்பட்டினம்’ 21-ந் தேதியும், நீர்மூழ்கிக்கப்பல் ‘வேலா’ 25-ந் தேதியும் சேர்க்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும், “ இந்தியாவில் தற்போது 39 போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் நாட்டின் பல்வேறு கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்படுகின்றன. இவை இந்தியாவின் கடல்சார் வலிமையை கணிசமாக உயர்த்தும்”எனவும் அவர் குறிப்பிட்டார்.
Leave your comments here...