பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துகளின் சொத்து முறைகேடாக விற்பனை – ‘சம்மன்’ அனுப்பி உச்ச நீதிமன்றம்

உலகம்

பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துகளின் சொத்து முறைகேடாக விற்பனை – ‘சம்மன்’ அனுப்பி உச்ச நீதிமன்றம்

பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துகளின் சொத்து முறைகேடாக விற்பனை –  ‘சம்மன்’ அனுப்பி உச்ச நீதிமன்றம்

பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்களின் சொத்துக்கள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக பதில் அளிக்கும்படி, அவற்றை நிர்வகிக்கும் அமைப்புக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ‘சம்மன்’ அனுப்பியுள்ளது.

இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையின் போது இரு தரப்பில் இருந்தும் ஏராளமாேனார் இடம் மாறினர். இந்தவகையில் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்களின் சொத்துக்களை இ.டி.பி.பி., என்ற அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்த அறக்கட்டளை கராச்சியில் இந்து பயணியர் தங்கும் தர்மசாலா ஆவணங்களில் மோசடி செய்து தொழிலதிபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளது.

இதை எதிர்த்து பாகிஸ்தான் இந்து குழு தலைவர் டாக்டர் ரமேஷ் குமார் வன்க்வனி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து தர்மசாலாவை இடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது, எந்த சட்டத்தின் கீழ் சிறுபான்மை இந்துக்களின் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டன என்பது பற்றி அறக்கட்டளை தலைவர் பதில் அளிக்கக் கோரி ‘சம்மன்’ அனுப்ப உத்தரவிட்டார்.

பாகிஸ்தான்-ல் இ.டி.பி.பி., நிர்வாகத்தின் கீழ், 1,831 கோவில்கள் மற்றும் குருத்வாராக்கள் உள்ளன. அவற்றில், 31ல் மட்டுமே வழிபாடு நடக்கிறது. இதர கோவில்கள் மூடப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. பல சொத்துக்கள் மூன்றாம் நபருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.

Leave your comments here...