ஹர்தீக் பாண்ட்யாவிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான வாட்சுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல்..!
7வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17ந்தேதி தொடங்கியது.
இதில் இந்திய அணியும் பங்கேற்றது. இந்திய அணி சார்பில் விளையாடிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது ‘ஷாட் பிட்ச்’ பந்து ஒன்று தோள்பட்டையில் தாக்கியது. இதனால் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. தொடர்ந்து போட்டியில் பங்கேற்பதில் தடை ஏற்பட்டது.
இந்த நிலையில், உலக கோப்பை போட்டிகள் நிறைவடைந்தன. இதனால், துபாயில் இருந்து பாண்ட்யா நாடு திரும்பினார். அவரிடம் மும்பை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டதில், பணம் செலுத்தியதற்கான உரிய ரசீதுகள் எதுவுமில்லாத 2 வாட்சுகள் இருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.5 கோடி என கூறப்படுகிறது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave your comments here...