ஆந்திராவில் இருந்து மராட்டியத்திற்கு கடத்திய 1,500 கிலோ போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் ..!

இந்தியா

ஆந்திராவில் இருந்து மராட்டியத்திற்கு கடத்திய 1,500 கிலோ போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் ..!

ஆந்திராவில் இருந்து மராட்டியத்திற்கு கடத்திய 1,500 கிலோ போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் ..!

குஜராத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 120 கிலோ எடை கொண்ட போதை பொருளை (ஹெராயின்) குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், மராட்டியத்தின் ஜல்காவன் மாவட்டத்தில் எராண்டல் பகுதியருகே மும்பை போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சந்தேகத்திற்குரிய வகையிலான 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்களிடம் இருந்து 1,500 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவற்றை ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 3 ஆயிரம் கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

Leave your comments here...