சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்த.. மோசமான நேரம் முடிந்து விட்டது – சொல்கிறார் தமிழ்நாடு வெதர் மேன்..!

தமிழகம்

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்த.. மோசமான நேரம் முடிந்து விட்டது – சொல்கிறார் தமிழ்நாடு வெதர் மேன்..!

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்த..  மோசமான நேரம் முடிந்து விட்டது – சொல்கிறார் தமிழ்நாடு வெதர் மேன்..!

சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இது அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கரையை கடக்கிறது. தாழ்வு மண்டலத்தால் சென்னையில் 15 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பல்வேறு சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சென்னை மாநகராட்சியின் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. பல சாலைகளிலும் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருசில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கபட்டுள்ளது.


இந்நிலையில், மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக ஊடக பக்கத்தில் கூறி இருப்பதாவது:- மோசமான நேரம் முடிந்துவிட்டது. அவ்வப்போது மழை பெய்யும். மாலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடசென்னை-ஸ்ரீஹரிகோட்டா பகுதியை கடக்கும் வரை காற்று வீசும். சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டில் சராசரியாக 150 மி.மீ மழை பதிவாகியுள்ளது மற்றும் சில பகுதிகளில் 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave your comments here...