9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 10,11, தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது.
அதன்படி, வங்கக்கடலில் ஏற்கனவே அறிவித்தபடி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்), கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். அதிகனமழை 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை பெய்யக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு நிர்வாக ரீதியாக வழங்கப்படும் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நவ.10, 11ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
Leave your comments here...