ராணுவத்தை நவீனமயமாக்க 7,965 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் கொள்முதல் – ராணுவ அமைச்சகம் ஒப்புதல்
மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் ராணுவத்தை நவீனமயமாக்க 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.
பாதுகாப்பு படைக்கு தேவையான ஆயுத கொள்முதல் கவுன்சில் கூட்டம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது.
பாதுகாப்பு படையை நவீனப்படுத்துவதற்காக, 7,965 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான பரிந்துரையை கவுன்சில் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, ஆயுத கொள்முதலுக்கு ராணுவ அமைச்சகம் உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:பாதுகாப்பு படையை நவீனப்படுத்த 7,965 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்கள் கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 12 இலகு ரக ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை வாங்கப்படும்.போர் கப்பல்களின் கண்காணிப்பு மற்றும் செயல்பாட்டுத் திறன் மேம்பாட்டிற்காக, ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.
கடற்படை திறனை அதிகரிக்கும் வகையில், கடல்சார் உளவு மற்றும் கடலோர கண்காணிப்பு பணிகளுக்கான டோர்னியர் விமானங்கள், ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்’ நிறுவனம் வாயிலாகமேம்படுத்தப்படும்.
சர்வதேச கொள்முதலை தவிர்த்து ‘ஆத்ம நிர்பார் பாரத்’ என்ற சுயசார்பு திட்டத்தின் கீழ், ‘பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ்’ வாயிலாக, எஸ்.ஆர்.ஜி.எம்., எனப்படும், மேம்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...