சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – அகிலேஷ் யாதவ் அறிவிப்பு..!

அரசியல்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – அகிலேஷ் யாதவ் அறிவிப்பு..!

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை  – அகிலேஷ் யாதவ் அறிவிப்பு..!

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். இவர் தற்போது அசம்கர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். கடசியின் முதல் மந்திரி வேட்பாளரும் அவரே.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அகிலேஷ் யாதவ் மாநிலத்தில் பிரசாரம் செய்து, ஆளும் பாஜக மீது தொடர்ச்சியான தாக்குதலைத் தொடுத்து வருகிறார். வருகிற சட்டசபை தேர்தலுக்கு முன், பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க, சமாஜ்வாதி கட்சி முனைப்பு காட்டி வருகிறது. சமாஜ்வாதி கட்சி ஏற்கனவே ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஹர்தோய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் உத்திரபிரதேசம் மீண்டும் செழிப்படையும். வரும் சட்டசபைத் தேர்தலில் எந்த தொகுதியிலும் நான் போட்டியிடப் போவதில்லை. மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி ஒரு காரியம் மட்டுமே செய்கிறது. முந்தைய சமாஜ்வாதி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மறுபெயரிட்டு கொள்கிறது.

ராஷ்டிரிய லோக் தளத்துடனான எங்கள் கூட்டணி இறுதியானது. தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யப்பட உள்ளது என கூறினார்.

Leave your comments here...