இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை – மத்திய மின்துறை அமைச்சகம்

இந்தியா

இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை – மத்திய மின்துறை அமைச்சகம்

இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை – மத்திய மின்துறை அமைச்சகம்

அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு அதிகரித்துள்ளதால், இந்தியாவில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக ஒருசில மாநிலங்களில் மின் பற்றாக்குறை இருந்தது. இந்த மின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என அச்சம் நிலவியது.

இந்நிலையில், இந்த அச்சத்தை போக்கும் வகையில் மத்திய மின்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அனல் மின்நிலையங்களில் நிலக்கரி இருப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அக்டோபர் 10-ம் தேதி 73 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த தினசரி நிலக்கரி இருப்பு, அக்டோபர் 24-ம் தேதி நிலவரப்படி 85 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க கோல் இந்தியா நிறுவனம், மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்படும் தினசரி நிலக்கரி விநியோக அளவை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அளவு மேலும் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1 லட்சத்து 26 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்த நிலக்கரி விநியோகம், இப்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் இந்த அளவு 1 லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதம் குளிர்காலம் தொடங்கிவிடும் என்தால், மின் தேவை குறையும் என்றும், மற்றொருபுறம் நிலக்கரி இருப்பு அதிகமாகும் எனவும் மின்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Leave your comments here...