முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாள் – பிரதமர் மோடி புகழாரம்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 90-வது பிறந்த தினம் இன்று ஆகும். பிறந்த தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் பேய்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
मिसाइल मैन के रूप में विख्यात देश के पूर्व राष्ट्रपति डॉ. एपीजे अब्दुल कलाम जी को उनकी जयंती पर सादर नमन। उन्होंने अपना जीवन भारत को सशक्त, समृद्ध और सामर्थ्यवान बनाने में समर्पित कर दिया। देशवासियों के लिए वे हमेशा प्रेरणास्रोत बने रहेंगे। pic.twitter.com/Pn2tF73Md6
— Narendra Modi (@narendramodi) October 15, 2021
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;- ஏவுகணை நாயகனாக அறியப்படும் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
இந்தியாவை வலிமையாகவும் வளமாகவும் மாற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் அப்துல் கலாம். அப்துல் கலாம் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்
Leave your comments here...