கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் கைது ரத்து..! கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசியல்இந்தியா

கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் கைது ரத்து..! கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் கைது ரத்து..! கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து கேரளாவுக்கு கடந்த ஆண்டு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முன்னாள் தலைமை செயலர் சிவசங்கர் உட்பட பலரை, என்.ஐ.ஏ., கைது செய்துள்ளது.

இதற்கிடையே ஸ்வப்னா சுரேஷ் மீது காபிபோசா எனப்படும் அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து, சுங்கத்துறை கைது செய்தது. காபிபோசா சட்டத்தின் கீழ் ஒருவரை விசாரணை இன்றி ஒரு ஆண்டு தடுப்பு காவலில் வைக்கலாம்.

இந்நிலையில் காபிபோசா சட்டத்தின் கீழ் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து, அவரது தாயார் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், காபிபோசா சட்டத்தில் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Leave your comments here...