தமிழகத்தில் முதல் ஸ்மார்ட் சிட்டி : சென்னை தி நகரில் ஆலயமணி அடித்து முதல்வர் எடப்பாடியார் திறந்தார் : மக்கள் பாராட்டு..!
ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது நாட்டில் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து, அந்த நகரங்களை அனைத்து வசதிகளுடன் இருக்கும் நகரமாக மாற்றுவதே ஆகும். அதாவது ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள ‘ஸ்மார்ட் சிட்டி’ நகரங்களை போல, இந்தியாவில் உள்ள நகரங்களையும் மாற்ற வேண்டும் என்பது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த திட்டம் பிரதமர் மோடியின் லட்சியமும் ஆகும். இந்த திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகரங்களுக்கு உலகத் தரம் வாய்ந்த, உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும். சுத்தமான குடிநீர், மின்சார வினியோகம், மேடு, நல்ல சாலைகள், அதிவேக, ‘இன்டர்நெட்’ இணைப்பு, தானியங்கி திடக்கழிவு மேலாண்மை, சிறப்பான பொது போக்குவரத்து, கனிணி மயமாக்கப்பட்ட பொதுமக்கள் சேவைகள் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும்.
மத்திய அரசின் திட்டப்படி தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி உட்பட 12 நகரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் ரூ.39.36 கோடி செலவில் நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகன எரிபொருள் மூலம் வெளியேறும் எரிவாயுவை குறைத்து மோட்டார் வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் தியாகராய நகரில் உள்ள தியாகராய சாலையில் மூத்த குடிமக்கள், குழந்தைகள், பாதசாரிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் எளிதாக செல்லும் வகையில், இந்த நடைபாதை வளாகம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.இதனை முதலமைச்சர் பழனிசாமி ஆலயமணி அடித்து திறந்து வைத்தார். பின்னர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் பேட்டரி காரில் சென்று முதலமைச்சர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் சண்முகம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, அமைச்சர் கேபி அன்பழகன், அமைச்சர் தங்கமணி சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், துணை ஆணையாளர்கள் கோவிந்தராவ், தலைமைப் பொறியாளர்கள் புகழேந்தி, மகேசன், ராஜேந்திரன் நந்தகுமார், துரைசாமி, காளிமுத்து, தி.நகர் தொகுதி எம்எல்ஏ சத்தியா, மத்திய ரீஜினல் துணை ஆணையர் ஸ்ரீதர், ரீஜினல் பொறியாளர் சரவணபவானந்தம், பத்தாவது மண்டல உதவி ஆணையர் பரந்தாமன், செயற்பொறியாளர்கள் பெரியசாமி, சின்னத்துரை, உதவி செயற்பொறியாளர்கள் கண்ணன், ராஜி, சுரேஷ், வருவாய் உதவி அலுவலர் ரவிச்சந்திரன், உள்ளிட் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் வணிகர்கள், பொது மக்கள், மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் பங்கேற்றனர்..!
Leave your comments here...