இதுவரை 50 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

இந்தியா

இதுவரை 50 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

இதுவரை 50 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

ஆசாதி @75-புதிய நகர்ப்புற இந்தியா மற்றும் நகர்ப்புற வரைபடத்தை மாற்றியமைக்கும்’ என்ற கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை லக்னோவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு முக்கிய இயக்கங்களின் கீழ் அமலாக்கப்பட்ட 75 திட்டங்களை உள்ளடக்கிய காஃபி மேசை புத்தகத்தை அவர் வெளியிட்டார். லக்னோவில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் இருக்கை அமைப்பது பற்றியும் பிரதமர் அறிவித்தார். பின்னர், இந்த திட்டத்தின் பயனாளிகளுடன் மோடி கலந்துரையாடினார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி அனைத்து சொத்துக்களும் வீட்டுக்குத்தேவையான அனைத்தும் ஆண்களின் பெயர்களிலேயே இருக்கும் சூழ்நிலை பற்றி எடுத்துரைத்த பிரதமர் இதில் சில மாற்றம் தேவை என்றார். இதன் மீது மேற்கொள்ளப்பட்ட உறுதியான நடவடிக்கை மூலம் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 80 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகள் பெண்களின் பெயரில் அல்லது கணவன்-மனைவி இருவரையும் உரிமையாளர்களாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

அன்னை பாரதிக்கு மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்த அடல் பிகாரி வாஜ்பாய் போல தேசிய தொலைநோக்குப் பார்வையை வழங்கும் லக்னோவைப் பிரதமர் பாராட்டினார். “பாபா சாகேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை அடல் பிகாரி வாஜ்பாய் இருக்கை அமைக்கப்பட்டிருப்பது இன்று எனது நினைவில் நிலைத்துள்ளது” என்று அவர் அறிவித்தார்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், முன்பைவிட அதிக எண்ணிக்கையிலான வீடுகள் கட்டப்பட்டுள்ளதை பிரதமர் வலியுறுத்தினார். நகரங்களில் 1.13 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், அவற்றில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஏற்கெனவே கட்டப்பட்டு ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். வலுவான வீடுகள் இல்லாமல் சேரிகளில் வசித்த 3 கோடி நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள், லட்சாதிபதிகளாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ‘‘பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நாட்டில் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றின் விலையை உங்களால் யூகிக்க முடியும். இந்த மக்கள் லட்சாதிபதிகளாகியுள்ளனர்’’ என கூறினார்.


உத்தரப் பிரதேசத்தில் தற்போதைய ஆட்சிக்கு முந்தைய ஆட்சிகளில் இருந்த அரசுகள், திட்டங்களை அமல்படுத்துவதில் காலம் தாழ்த்தினர். 18,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. ஆனால் அப்போது 18 வீடுகள் கூட கட்டப்படவில்லை என பிரதமர் கூறினார். யோகி ஆதித்யநாத் தலைமையின் கீழ் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், நகர்ப்புற ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட்டன மற்றும் 14 லட்சம் வீடுகள் கட்டும் பணி தற்போது பல நிலைகளில் உள்ளன என அவர் தெரிவித்தார். இந்த வீடுகளில் நவீன வசதிகள் உள்ளன.

நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் பிரச்னைகள் மற்றும் சவால்களை சமாளிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்துள்ளதாக பிரதமர் வலியுறுத்தினார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் (RERA) முக்கியமான நடவடிக்கை. இந்தச் சட்டம், முழு வீட்டுவசதித் துறையையும் அவநம்பிக்கை மற்றும் மோசடியிலிருந்து வெளியேற உதவியது மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் உதவியது மற்றும் அதிகாரம் அளித்துள்ளது.

எல்இடி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டதன் மூலம், உள்ளாட்சி அமைப்புகள், ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1000 கோடி சேமிக்கின்றன. தற்போது, இந்த தொகை, இதர வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. எல்இடி விளக்குகள், நகரங்களில் வசிக்கும் மக்களின் மின்சாரக் கட்டணத்தையும் வெகுவாக குறைத்துள்ளது.

தொழில்நுட்பம் காரணமாக, நகர்ப்புறங்களில் கடந்த 6-7 ஆண்டுகளில், மிகப் பெரிய உருமாற்றம் ஏற்பட்டுள்ளது என பிரதமர் கூறினார். நாட்டில் இன்று 70-க்கும் மேற்பட்ட நகரங்களில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டுபாட்டு மையங்களின் அடிப்படை தொழில்நுட்பம். ‘‘ இன்று நீங்கள் முதலில் – தொழில்நுட்பம் முதலில்’’ என்று நாம் சொல்ல வேண்டும்’’ என பிரதமர் கூறினார்.

பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ், சாலையோர வியாபாரிகள் வங்கிகளுடன் இணைந்துள்ளனர். இந்தத் திட்டம் மூலம், ரூ.2,500 கோடிக்கும் மேற்பட்ட நிதியுதவி, 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், 7 லட்சத்துக்கும் மேற்பட்ட உத்தரப் பிரதேச பயனாளிகள் ஸ்வாநிதி திட்டத்தின் பயனை பெற்றுள்ளனர். டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்கு, வியாபாரிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இந்திய மெட்ரோ சர்வீஸ் வேகமாக விரிவடைந்து வருவதாக பிரதமர் இன்று கூறினார். 2014ம் ஆண்டில், 250 கி.மீ தூரத்துக்கு குறைவான வழித்தடங்களில் மெட்ரோ சேவைகள் பயன்படுத்தப்பட்டன. இன்று 750 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. தற்போது 1000 கி.மீக்கும் அதிகமாக மெட்ரோ ரயில் பாதை பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், தஹர்தீப் பூரி, மகேந்திரநாத் பாண்டே, கவுஷல் கிஷோர், உத்திரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் பட்டேல் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

Leave your comments here...