‘தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு..?
கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. கடந்த 2019 ஆம் ஆண்டு தனது காவல் பணியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தமிழகத்திற்கு வந்தார். இயற்கை விவசாயத்தின் மீது ஈடுபாடு கொண்ட அவர் பாஜகவில் கடந்த 2020 இல் இணைந்தார். இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதையடுத்து தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் மத்திய அமைச்சரான பிறகு அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
அது போல் அடுத்த 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி ஏற்படும் என தற்போதைய தலைவர் அண்ணாமலை அடித்து கூறுகிறார். மேலும் அதற்கான பணிகளை தாம் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறி வருகிறார். இவர் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதீத நம்பிக்கை வைத்துள்ளார்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படு வேகமாக செயல்பட்டு வருகிறார். எந்த பிரச்னையையும் திறமையாக கையாள்கிறார்.சிக்கலான விஷயங்களையும் எளிதாக முடித்து வைக்கிறார்’ என, டில்லி பாஜக தலைவர்கள் சொல்கின்றனர்.
குறிப்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, இவர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். ‘அண்ணாமலையின் செயல்பாட்டால், தமிழக அரசியலில் அவருக்கு அதிக அளவில் எதிர்ப்புகள் உள்ளன. அவர் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது’ என, உளவுத்துறையினர் அமித்ஷாவிற்கு அறிக்கை அளித்துள்ளனர். இதையடுத்து, அண்ணாமலைக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்பு அளிக்க அமித்ஷா முடிவெடுத்துள்ளார்.
Leave your comments here...