4 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிரதமர் அறிமுகம் செய்த “சௌபாக்யா யோஜனா” திட்டம் – அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்!
சௌபாக்கியா தொடங்கப்பட்டதில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 31 வரை 2.82 கோடி குடும்பங்களுக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது. மார்ச் 2019 நிலவரப்படி, நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 2.63 கோடி மின்சாரம் இல்லாத வீடுகளுக்கு சாதனை அளவில் 18 மாதங்களில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டன.
31.03.2019 க்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட சுமார் 18.85 லட்சம் மின்சாரம் இல்லாத குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்ததாக அசாம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மணிப்பூர், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்கள் தெரிவித்துள்ளன. ஆரம்பத்தில் மின்சார இணைப்புக்கு விருப்பம் தெரிவிக்காத இந்த குடும்பங்கள் பின்னர் அதை விரும்பி ஏற்றுக்கொண்டன.
தீன்தயாள் உபாத்யாயா கிராம ஜோதி யோஜனா (DDUGJY) உடன் இந்த பயணம் தொடங்கியது. கிராமங்களில் அடிப்படை மின்சார உள்கட்டமைப்பை உருவாக்குவதை இது நோக்கமாக கொண்டிருந்தது. கிராமப்புறங்களில் மின்சக்தியின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்காக தற்போதுள்ள உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் தற்போதுள்ள ஃபீடர்கள்/விநியோக மின்மாற்றிகளின் அளவீடு ஆகியவை இத்திட்டத்தின் எண்ணமாக இருந்தது.
எதிர்வரும் பாதை திட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்கள் அடையப்பட்டாலும், 24×7 தரமான மின்சாரம் அனைவருக்கும் வழங்குவதற்கான பணியை சௌபாக்கியா தொடர்ந்தது. அனைத்து மாநிலங்களும் மின்சாரம் வழங்கப்படாத குடும்பங்களை அடையாளம் காணவும், பின்னர் அவர்களுக்கு மின் இணைப்புகளை வழங்கவும் அந்தந்த மாநிலங்களில் சிறப்பு பிரச்சாரங்களைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக பிரத்தியேக கட்டணமில்லா தொலைபேசி வசதியும் தொடங்கப்பட்டுள்ளது.
Leave your comments here...