திருப்பதி ஏழுமலையானை வழிபட 2 டோஸ் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம்
கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சித்தூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமே இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளிமாநில பக்தர்களும் இலவச தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு புதிய விதிமுறையை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில்:- திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இனிமேல் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழ்கள் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என அறிவித்துள்ளது. வரும் 25-ஆம் தேதி முதல் இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் பக்தர்களுக்கு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி வரை ஏழுமலையானை இலவசமாக தரிசிக்கும் வகையில் நாளொன்றுக்கு 8 என்ற எண்ணிக்கையில் இலவச தரிசனம் டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படும் எனவும், இதன் காரணமாக இம்மாதம் 26-ஆம் தேதி முதல் திருப்பதியில் உள்ள சீனிவாசம் கட்டிட வளாகத்தில் செயல்படும் இலவச தரிசன கவுண்டர் மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Leave your comments here...