விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு போட்டியாக ஜெபயாத்திரை : கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு கடிதம்..!

தமிழகம்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு போட்டியாக ஜெபயாத்திரை : கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு கடிதம்..!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு போட்டியாக ஜெபயாத்திரை : கிறிஸ்தவர்களுக்கு அழைப்பு கடிதம்..!

கொரோனா பாதிப்பை காரணம் காட்டி இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வணங்குவதற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது.

ஆனால், இந்த தடை அறிவிக்கப்படுவதற்கு முன்பு கடந்த ஆக.,16ம் தேதி , கிறிஸ்துவர்களுக்கு கோவை, செயின்ட் பால் கல்லுாரி சார்பில், அதன் தலைவர் டேவிட் கடிதம் அனுப்பி உள்ளார். அவை, கல்லூரி பெயருடன் பிட் நோட்டீஸ்களாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: 3 ஆண்டுகளாக கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு சிறப்பு ஜெபயாத்திரை நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று அல்லது அதற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் முன்பாக நம்முடைய வசதிக்கு ஏற்ப கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் சபையாக, குழுவாக அல்லது குடும்பமாக வாகனம் ஏற்பாடு செய்து, அதற்குள் அமர்ந்து கொண்டு, கோவையில் விக்கிரக வணக்கம் மாற ஜெபித்தோம். 2017 ம் ஆண்டு கோவையில் உள்ள அனைத்து சபை பிரிவுகளும் இணைந்து சுமார் 200 வாகனங்களில் ஆக.23ம் தேதி கோவையில் 100 வார்டுகளில் ஜெபித்தோம். 2018 செப்.,1ம் தேதி கோவையில் 100 வார்டுகளில் சுமார் 1,000 வாகனங்களில் அனைத்து சபை பிரிவு மக்களும் இதற்காக ஜெபித்தார்கள். 2019 செப்.,2 அன்றும் இதுபோல் ஜெபயாத்திரை நடைபெற்றது.

இப்படி 3 ஆண்டுகளாக கோவையில் ஜெபயாத்திரை நடத்தியதன் விளைவாக கோவை மாவட்ட கலெக்டர் அனுமதியில்லாமல் யாரும் விநாயகர் சிலையை வெளியில் வைக்கக்கூடாது என்றும் , சிலைகளின் அளவு இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்றும், 1 அல்லது 2 நாட்களில் கலெக்டர் குறிப்பிட்ட வழியாக சென்று அவர் குறிப்பிட்ட இடங்களில் சிலைகளை கரைத்து விட வேண்டும் என்றும் இன்னும் சில கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு போட்டு உள்ளார். இதனால், சிலைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது எல்லாம், இந்த 3 ஜெப யாத்திரகளின் விளைவுதான் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த உத்தரவினால் தற்போது விநாயகர் சதுர்த்தி நாட்களில் பிரச்னை ஏதும் வராமல் அமைதி நிலவுகிறது. ஆகவே, இந்த ஆண்டும் இதை சிறப்பாக நடத்தி உங்களது ஆதரவும், ஒத்துழைப்பும் உத்தரவும் வேண்டும்.

இந்த ஆண்டு செப்.,10ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் செப்.,10ம் தேதியோ அல்லது 9 அல்லது 8 ம் தேதியோ அல்லது அவரவருக்கு வசதியான இன்னொரு நாளிலோ இந்த ஜெப யாத்திரையை உங்கள் சபைகளில் மிஷனரி பணித்தளங்களில் உள்ள போதகர்கள், மூப்பர்கள் மற்றும் விசுவாசிகளை உங்கள் மூலமாக பயன்படுத்தி நடத்த விரும்புகிறேன். கொரோனா காலத்தில் இப்படிப்பட்ட ஜெபயாத்திரை மிகுந்த பலனளிக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது

இது போன்ற ஜெபயாத்திரைகளை 2017 முதல் நடத்தப்படுவதாக நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் ஜெபயாத்திரை நடத்தப்படுவதாக தெரிகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், ஜெபயாத்திரை என்ன செய்யப்போகிறார்கள் என்று அறிவிக்கப்படவில்லை. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தால் மட்டும் ஜெபயாத்திரை நடக்குமா? அல்லது விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ஜெபயாத்திரை நடக்குமா? என்று தெரியவில்லை. நாடு முழுவதும் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைப்பதற்காகவே கிறிஸ்தவ அமைப்புகள் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்த பிட் நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டேவிட் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என ஹிந்து முன்னணி கோரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக கோவை வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், கோவை மாவட்ட பொறுப்பாளர் பாலன், பொதுச்செயலர் தியாகராஜன், செய்திதொடர்பாளர் ஜெய்கார்த்தி உள்ளிட்ட 100 பேர், துடியலூர் போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டு இன்ஸ்பெக்டர் ஞானசேகரிடம் புகார் அளித்தனர். அதற்கு இன்ஸ்பெக்டர், இன்று மாலைக்குள் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு, டேவிட் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

பின்னர் பாலன் கூறியதாவது: டேவிட் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்யப்படவில்லை என்றால், நாளை காலை மேட்டுப்பாளையம் ரோட்டில் ஞானம்பிகா மில்ஸ் பிரிவில் ஹிந்து முன்னணி தொண்டர்கள் 5 ஆயிரம் பேர் திரண்டு சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Leave your comments here...