புதிய கல்விக் கொள்கை : சர்வதேச அறிவுசார் வல்லரசாக இந்தியாவை மாற்றும்: மத்திய கல்வி அமைச்சர்

இந்தியா

புதிய கல்விக் கொள்கை : சர்வதேச அறிவுசார் வல்லரசாக இந்தியாவை மாற்றும்: மத்திய கல்வி அமைச்சர்

புதிய கல்விக் கொள்கை : சர்வதேச அறிவுசார் வல்லரசாக இந்தியாவை மாற்றும்: மத்திய கல்வி அமைச்சர்

புதிய கல்விக் கொள்கை 2020, சர்வதேச அறிவுசார் வல்லரசாக இந்தியாவை மாற்றும் என்று மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் (என்சிஇஆர்டி) 61-ஆவது நிறுவன தின நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பேசுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மத்திய கல்வி இணை அமைச்சர்கள் சுபாஷ் சர்கார், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், அமைச்சகம் மற்றும் என்சிஇஆர்டி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், என்சிஇஆர்டி நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்ததுடன், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு இந்த நிறுவனம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டினார்.‌ பெருந்தொற்று காலகட்டத்தில் மாற்று கல்வி அட்டவணைக்கு பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத் திட்டங்களை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியதைக் குறிப்பிட்ட அமைச்சர், புதிய கல்விக் கொள்கை 2020-இல் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு ஏற்றவாறு மாபெரும் மாற்றத்தை கொண்டுவர என்சிஇஆர்டி தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர் சுபாஷ் சர்கார், தற்சார்பு இந்தியா மற்றும் திறன் இந்தியாவை அடைவதில் ஒருங்கிணைந்த தொழில் மற்றும் அறிவு சார்ந்த கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். புதிய கல்விக் கொள்கை, புதிய இந்தியாவிற்கு வழிவகுக்கும் என்ற பிரதமரின் கூற்றை அவர் நினைவு கூர்ந்தார்.

இதில் இணை அமைச்சர் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் பேசுகையில், தமது பள்ளி காலத்தில் பள்ளி வளாகத்தை அனைவரும் இணைந்து தூய்மைப்படுத்திய நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, இதுபோன்று பிறருடன் இணைந்து செயல்படும் உணர்வை பள்ளி அளவில் புதிய பாடத்திட்டம் ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தூய்மை இந்தியா திட்டத்திற்கும் இதன் மூலம் வலு சேர்க்கப்படும்.

இந்த நிகழ்ச்சியின்போது, என்சிஇஆர்டியின் வெளியீடான சமூகவியல் அகராதியை ஆங்கிலம், இந்தி மற்றும் உருது ஆகிய மூன்று மொழிகளில் சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர்.

Leave your comments here...