பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார்..!
பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாடு பிரேசிலில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுவதையொட்டி, இன்று பிற்பகல் பிரதமர் மோடி பிரேசிலியா நகருக்கு புறப்பட்டுச் செல்கிறார். இந்த மாநாட்டில் மோடி பங்கேற்பது இது 6வது முறையாகும். எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. தமது பயணத்தின்போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை தனித்தனியே பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்.
பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறையினர் கூட்டம், பிரிக்ஸ் மாநாட்டின் முக்கிய அமர்வு, முழுமையான அமர்வு ஆகிய கூட்டங்களில் மோடி பங்கேற்கிறார். முக்கிய அமர்வில் தற்கால சூழலில் நாடுகளின் இறையாண்மையை காப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும.பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் உலகின் 42 சதவீத மக்களை கொண்டுள்ளது.5 மிகப்பெரிய பொருளாதார நாடுகளுடைய அமைப்பாகவும் இது உள்ளது. இந்த ஆண்டுக்கான விவாதம் பிரகாசமான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்பதாகும்.பிரதமர் நவம்பர் 13ம் தேதி காலை பிரேசில்லா நகரை அடைவார் . முதல் நாளில் விளாதிமீர் புதின், சீ ஜின்பிங், உள்ளிட்ட பிரிக்ஸ் நாட்டு தலைவர்களுடன் தனித்தனியே இருதரப்பு உறவுகள் குறித்து மோடி பேச்சு நடத்துவார் என்று வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது
Leave your comments here...