மரத்திலிருந்து திடீர் தண்ணீர் : ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்ற பொதுமக்கள்
மதுரை பைபாஸ் சாலை துரைசாமி நகர் வேல்முருகன் நகர் செல்லும் வழியில், மரம் ஒன்று உள்ளது. இதில், காலை 12 சுமார் 3 அடி உயரத்திலிருந்து மரத்திலிருந்து தண்ணீர் மல மல மல வென்று தண்ணீர் கொட்டத் தொடங்கியது.
அப்பொழுது, அப்பகுதியில் சென்று கொண்ட மக்கள் மரத்தில் இருந்து தண்ணி வருவதை கண்டு அதிர்ந்து போனார்கள். உடனடியாக, அக்கம் பக்கத்தில், காட்டுத்தீயாய் வாட்ஸ் அப்பில் பரவியது .வேடிக்கை பார்த்த பொதுமக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. பின்னர், சிறிது நேரத்தில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக நிற்கத் தொடங்கியது.
இது குறித்து, மாநகராட்சி 76-வார்டு அதிகாரி சேவியர் கேட்டபொழுது, மாநகராட்சி குடிநீர் செல்லும் மெயின் லைனில் லீக்காகி உள்ளது எனவும் இதனால் அழுத்தம் தாங்காமல் மரத்தின் உள்ளே சென்று தண்ணீர் வெளியே வந்திருக்கலாம் என தெரிவித்தார்.
இதுகுறித்து, மெயின் பைப் லைனில் தண்ணீரை நிறுத்தச் செய்து குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு மாநகராட்சி ஊழியர்கள் உள்ளார்கள் என தெரிவித்தார். மரத்தில் இருந்து திடீரென்று தண்ணீர் வந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் பணியை மேற்கொண்டதால், மரத்திற்கு பால் ஊத்தி பொட்டுவைத்து மாலை போட வில்லை.
Leave your comments here...