இந்து கோவில்கள் அருகே மாட்டிறைச்சி விற்க தடை -புதிய மசோதோவை நிறைவேற்றிய அசாம் அரசு

இந்தியா

இந்து கோவில்கள் அருகே மாட்டிறைச்சி விற்க தடை -புதிய மசோதோவை நிறைவேற்றிய அசாம் அரசு

இந்து கோவில்கள் அருகே மாட்டிறைச்சி விற்க தடை -புதிய  மசோதோவை  நிறைவேற்றிய அசாம் அரசு

இந்து கோயில்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மாடுகளை இறைச்சிக்காக கொல்வதையும் மாட்டிறைச்சி விற்பனையையும் தடை செய்வது குறித்த அம்சங்கள் கொண்ட புதிய மசோதா ஒன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றத்தி உள்ளது.

இந்துக்கள் புனிதமாக கருதும் விலங்குகளில் ஒன்று பசுமாடு என்பதும் பசுவை இந்துக்கள் தெய்வம் போல கும்பிட்டு வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் மாட்டிறைச்சி இந்துக்கோயில்கள் அருகிலேயே விற்பனை செய்யும் நிலை இருந்து வருவது இந்து பக்தர்களின் மனதை புண்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அசாம் மாநில சட்டப்பேரவையில் இன்று இது குறித்த புதிய மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நிறைவேற்றப்பட்டுள்ள புதிய கால்நடை பாதுகாப்பு மசோதாவில் இந்து கோவில்களுக்கு 5 மீட்டர் சுற்றளவில் மாடுகளை இறைச்சிக்காக கொல்லக்கூடாது என்றும், மாட்டிறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துக்கள் மட்டுமின்றி ஜெயின்கள் மற்றும் சீக்கியர்கள் வசிக்கும் இடங்களிலும் கால்நடைகளை கொல்லவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுவதாக அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உரிய ஆவணங்களின்றி கால்நடைகளை ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு கொண்டு செல்வதும் இந்த புதிய மசோதாவின்படி குற்றமாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்தக் குற்றத்தை செய்பவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave your comments here...