உள்நாட்டு விமான கட்டணம் அதிகரிப்பு – விமானப் பயணிகள் தவிப்பு..!
உள்நாட்டு விமானப் பயணத்துக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஊரடங்கு தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருவதால் விமான போக்குவரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் உள்நாட்டு பயணத்துக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- விமான போக்குவரத்தில் 40 நிமிடங்களுக்கு உள்ளான பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 2,600 ரூபாயாக இருந்தது; இது, 2,900 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
அதிகபட்ச கட்டணம், 12.82 சதவீதம் உயர்த்தப்பட்டு 8,800 ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது. 40 – 60 நிமிடங்கள் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 3,300 ரூபாயிலிருந்து 3,700 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்ச கட்டணம்அதிகபட்ச கட்டணம் 11 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்படுகிறது. 60 – 90 நிமிடம் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 4,500 ரூபாயாகவும், அதிக பட்ச கட்டணம் 13 ஆயிரத்து 200 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.
அதேபோல் 90 – 120 நிமிடம் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்சக் கட்டணம் 4,700 ரூபாயிலிருந்து, 5,300ஆக அதிகரிக்கப்படுகிறது. அதே நேரத்தில் 150 – 180 நிமிடங்கள் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் 7,400 ரூபாயிலிருந்து 8,300 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்ச கட்டணம் 12.74 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
அதேபோல் 180 – 210 நிமிடங்கள் வரை பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் 8,700 ரூபாயிலிருந்து, 9,800 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் 12.39 சதவீதமும் உயர்த்தப்படுகிறது. சேவை வரிஇந்தக் கட்டணத்துடன் பாதுகாப்புக் கட்டணம், விமானநிலைய பயனாளர் கட்டணம், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவையும் பயணியரிடம் வசூலிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
Leave your comments here...