அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும் – முகலாய இளவரசர் யாகூப் ஹபிபுதின்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படுகிற 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்காக தகுந்த இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை வழங்கவும் நீதிபதிகள் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
இந்த நிலையில் முகலாய அரச வம்சத்தில் கடைசியாக வந்த பகதூர்ஷா ஷாபரின் வாரிசு என இவர் தன்னை அறிவித்துக்கொண்ட அரச பரம்பரையை சேர்ந்த இளவரசர் யாகூப் ஹபிபு தின் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்துக்களுக்கு இஸ்லாமியர்கள் உதவ வேண்டும். இதன் மூலம் சகோதரத்துவத்துக்கு உதாரணமாக திகழ வேண்டும். அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு தங்கத்தால் ஆன ஒரு செங்கலை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளேன்.
Leave your comments here...