தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழகம்

தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று  தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தாக்கலாகும் இ-பட்ஜெட்டை கணினி திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில், 2021 – 22ம் ஆண்டில் நிலுவையில் உள்ள மொத்தக் கடன், 5.70 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்; வருவாய் பற்றாக்குறை, 41 ஆயிரத்து 417 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. இது, அதிகரிக்க வாய்ப்புள்ளது. சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதை நிறைவேற்றும் வகையில், புதிய அறிவிப்புகள்பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அனைத்து துறைகளையும் மேம்படுத்த, பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறலாம். ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்கள் தொடர நிதி ஒதுக்கப்படுமா அல்லது ஏதேனும் திட்டங்கள் கைவிடப்படுமா என்பதும் இன்று தெரியும்.

அரசின் வருவாயை பெருக்க, பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என, நிதி அமைச்சர் தியாகராஜன் ஏற்கனவே கூறியிருந்தார். அந்த திட்டங்கள் என்ன என்பதும் இன்றைய பட்ஜெட்டில் தெரிய வரும். இன்று பட்ஜெட் உரையுடன், சட்டசபை நிறைவடையும். நாளை முதன் முறையாக, 2021 – 22ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது

Leave your comments here...