இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு ஊசியில்லா தடுப்பு மருந்து: ஜைடஸ் கெடிலாவுக்கு விரைவில் அனுமதி.!

இந்தியா

இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு ஊசியில்லா தடுப்பு மருந்து: ஜைடஸ் கெடிலாவுக்கு விரைவில் அனுமதி.!

இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு ஊசியில்லா தடுப்பு மருந்து: ஜைடஸ் கெடிலாவுக்கு விரைவில் அனுமதி.!

இந்தியாவில் கோவிட் தொற்றுக்கு எதிராக இதுவரை 5 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக், மாடர்னா, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

ஆமதாபாத்தின் ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் இந்தியாவில் 6வது தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும். மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2வது தடுப்பு மருந்து என்ற பெருமையும், முதல் டிஎன்ஏ வகை தடுப்பூசி என்ற பெருமையும் கெடிலா நிறுவனத்துக்குக் கிடைக்கும்.

ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களைக் கொண்டது. இது ஊசியில்லா தொழில்நுட்பத்தில் இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. குறிப்பாக, தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (hypodermic needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் இம்மருந்து செலுத்தப்படும். இந்தத் தடுப்பு மருந்து, மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத் துறையின் கீழ்வரும். 3ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையை முடித்து கடந்த மாதம் டிஜிசிஐ அமைப்பிடம் ஜைடஸ் கெடிலா நிறுவனம் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி கோரியுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் பேசுகையில், ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை அக்டோபர், நவம்பர் மாதத்தில் எதிர்பார்க்கலாம். இந்த நிறுவனங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தியைத் தொடங்கும்போது தடுப்பூசி பற்றாக்குறை குறையும். ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்கும் அவசர காலப் பயன்பாட்டுக்கு விரைவில் வல்லுநர்கள் குழு அனுமதியளிக்கும்’ எனறார்.

Leave your comments here...