ஜம்மு – காஷ்மீரில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை
ஜம்மு – காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜமாத்- – இ – -இஸ்லாமி அமைப்புடன் தொடர்பு உடையோர் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 56க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது மற்றும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஜமாத்- இ -இஸ்லாமி என்ற அமைப்பு ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
இதையடுத்து ஜம்மு – காஷ்மீர் முழுதும், இந்த அமைப்பில் இணைந்து செயல்பட்ட நுாற்றுக்கணக்கானோர் கைதாயினர். இந்நிலையில் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரம்பன், கிஷ்த்வார், தோடா மற்றும் ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களில் 56க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ., அமைப்பினர் நேற்று சோதனை நடத்தினர்.
‘டிஜிட்டல்’ சாதனம்ஜமாத்- இ – இஸ்லாமி அமைப்புடன் தொடர்பு உடையோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை துவங்கி தொடர்ந்து நடக்கிறது.சோதனையில் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்தது தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மற்றும் ‘டிஜிட்டல்’ சாதனங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்
Leave your comments here...