இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 50 கோடியைக் கடந்தது.!
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 50 கோடியைக் கடந்து குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது.
நேற்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 58,08,344 முகாம்களில் 50,10,09,609 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 49,55,138 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,10,55,861 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 40,017 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.37 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,628 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.தொடர்ந்து 41 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,12,153 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.29 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 17,50,081 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 47,83,16,964 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.39 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.21 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 12 நாட்களாக அன்றாட தொற்று உறுதி விழுக்காடு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 61 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.
Leave your comments here...