டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்..!

விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்..!

டோக்கியோ ஒலிம்பிக்  போட்டி : ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. இதன் மூலம் தடகளப் போட்டியில் ஒலிம்பிக் களத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32வது ஒலிம்பிக் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய நாள் இந்தியாவுக்கான சிறந்த நாள் என்றே சொல்ல வேண்டும். முதலில், ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடை பிரிவுப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.

தற்போது, ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. ஹரியாணா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா மீது ஒட்டுமொத்த இந்தியாவும் பெரும் நம்பிக்கை வைத்திருந்தது.

அந்த நம்பிக்கையை மெய்ப்பித்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு ஈட்டி எறிதல் போட்டி தொடங்கியது. இதில், முதல் வாய்ப்பில் 87.03 மீட்டர் தூரத்துக்கும், இரண்டாவது வாய்ப்பில் 87.58 மீட்டர் தூரமும், மூன்றாவது வாய்ப்பில் 76.79 மீட்டர் தூரமும் ஈட்டியை பாயவிட்டார். நான்காவது முயற்சி தோல்வியில் முடிந்தாலும் கூட அவர் தனது இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தது அவருக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளது.

தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது. ஹரியாணா மாநிலம் பானிபட்டில் உள்ள அவரது வீட்டின் முன் மக்கள் தேசியக் கொடியுடன் திரண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave your comments here...