பள்ளத்தாக்கில் கவிழ இருந்த பேருந்து.. உயிரை பணயம் வைத்து 22 பேரை காப்பாற்றிய டிரைவர்.!

இந்தியா

பள்ளத்தாக்கில் கவிழ இருந்த பேருந்து.. உயிரை பணயம் வைத்து 22 பேரை காப்பாற்றிய டிரைவர்.!

பள்ளத்தாக்கில் கவிழ இருந்த  பேருந்து.. உயிரை பணயம் வைத்து 22 பேரை காப்பாற்றிய டிரைவர்.!

இமாசல பிரதேசம் மாநிலம் சிர்மிர் மாவட்டத்தின் ஷில்லாய் பகுதியில் 22 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று, பல பயணிகளை ஏற்றுக்கொண்டு, சென்று கொண்டிருந்தது.

அந்த பகுதியில் உள்ள மலை பகுதியின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 707 இல் பொஹ்ராட் காட் அருகே சென்றுகொண்டு இருந்தது.மலை பகுதியில் உள்ள அந்த சாலையானது, ஒரு பக்கம் மலையும், இன்னொரு பக்கம் பள்ளத்தாக்கையும் கொண்டதாக இருந்தது.

அப்போது, பேருந்து எப்போதும் செல்லும் வேகத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென்று பேருந்தின் டயர் வெடித்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி உள்ளது. அத்துடன், அந்த பேருந்து தாறுமாறாக ஓடிய நிலையில், திடீரென்று சாலையோரமாக இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கிற்குள் விழந்து விடும் தருவாயில் செல்ல, உடனடியாக சுதாரித்துக் கொண்ட பேருந்தின் டிரைவர், சாமார்த்தியமாக பிரேக் போட்டு, பேருந்தை நிறுத்த போராடி உள்ளார்.

இதனால், அந்த பேருந்து சாலைக்கும், சாலையின் ஓரமாக இருந்த அந்த பள்ளத்தாக்கிற்கும் இடையே தொக்கி பள்ளத்தாக்கில் கீழே விழும் நிலையில் தொங்கிக்கொண்டு நின்றுள்ளது.

மேலும், பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பேருந்தை, அதன் டிரைவர் கண் இமைக்கும் நேரத்தில், தனது கட்டுக்குள் கொண்டு வந்து, பேருந்தில் இருந்த பயணிகள் 22 பேரும், பேருந்தை விட்டு வெளியேறும் வரை, தனது உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு, அந்த பேருந்தை அப்படியே தனது கட்டுப்பாட்டில் நிறுத்தி் வைத்திருந்தார்.

இதன் காரணமாக, பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் பத்திரமாகப் பேருந்தை விட்டு, வெளியே வந்தனர். அதன் பிறகு, கடைசியாகக் கடைசி ஆளாக அந்த பேருந்தின் டிரைவரும் வெளியே வந்திருக்கிறார். இதனிடையே, பயணிகளுடன் பள்ளத்தாக்கிற்குள் விழ இருந்த பேருந்தை, தனது உயிரை பணயம் வைத்து பயணிகள் அனைவரும் வெளியேறும் வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த டிரைவருக்கு தற்போது பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave your comments here...