பேக் திருடும் குற்றவாளி கைது.. 16 பவுன் தங்க நகைகள், லேப்டாப், செல்போன்கள் பறிமுதல்.!
மதுரை மாநகர் பேருந்து நிலையம் பேருந்து பயணம் செய்யும் பயணிகள் இருந்து பேக்குகளை திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இதில், தொடர்புடைய குற்றவாளியை கண்டறிய மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின் பேரில், காவல் துணை ஆணையாளர் ராஜசேகரன், மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படையினர்.
இதில், தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் பயணிகளிடம் பேக்குகளை திருடும் பழங் குற்றவாளியான, பாலசுப்பிரமணி என்ற சுப்புக்காளை என்பது பிடித்து விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில், மதுரை மாநகர பேருந்து நிலையங்களில் பயணிகளிடமிருந்து பேக்குகளை திருடியதாக ஒப்புக்கொண்டார்.
அவரிடமிருந்து 5 வழக்குகளில், தொடர்புடைய சுமார் 6 லட்சம் மதிப்புள்ள 16 பவுன் தங்க நகை 4 லேப் டாப் 5 செல்போன் கைப்பற்றப்பட்டது. குற்றவாளிக்கு, பாலசுப்பிரமணி என்ற சுப்பிரமணி என்று சுப்புக காளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த குற்ற வழக்குகளில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்த தனிப்படை யினரை, மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் அவர்களின் மற்றும் காவல்துறை துணை ஆணையர் (குற்றம்) அவர்களையும் வெகுவாக பாராட்டினார்கள்
Leave your comments here...